கொரோனாவை வெல்வோம் – கவியரங்கம்
உன்னத் பாரத் அபியான் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் இணைந்து 13.04.2021 செவ்வாய்கிழமை அன்று இணையவழியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘கொரோனாவை வெல்வோம்’ என்ற தலைப்பில் கவியரங்கம் ஒன்றை நடத்தியது. இக்கவியரங்கில் 80க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கவிதைகளை வாசித்தனர்.
13.04.21 செவ்வாய்க் கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இக் கவியரங்க நிகழ்வில் உன்னத் பாரத் அபியான் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நோடல் அதிகாரி முனைவர் வ. திருமுருகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றியதோடு உன்னத் பாரத் அபியான் மேற்கொள்ளும் பல்வேறு சமுதாய மேம்பாட்டுச் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். அதன் பின்னர் முன்னிலையுரை ஆற்றிய தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர் கரு. நாகராசன் அவர்கள் தமிழ்ப்பேராயத்தின் செயல்பாடுகளை கூறியதோடு ‘கொரோனா விழிப்புணர்வு’ குறித்தத் தனது கவிதையை வாசித்தார்.
இணையவழியிலான இக் கவியரங்கம் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் ஒரு நடுவரின் முன்னிலையில் கவிதைப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெறுவோர்க்கு முதல் பரிசு ரூ.1000/-,இரண்டாம் பரிசு ரூ. 750/-, மூன்றாம் பரிசு ரூ. 500/- ஆறுதல் பரிசு ரூ. 250/- அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் குழுவிற்கு எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கி. சுந்தர்ராஜன் அவர்கள் நடுவராகவும், இரண்டாவது குழுவிற்கு எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ந. இரஞ்சன் அவர்கள் நடுவராகவும், மூன்றாவது குழுவிற்கு நடுவராக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இராமாபுர வளாகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பாரத ராஜா அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர்.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிப்போட்டியில் 9 கவிஞர்கள் பங்கேற்றனர். இந்த இறுதிப்போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களான கவிஞர் மன்னர் மன்னன் மற்றும் கவிஞர் சுபா அருணாச்சலம் ஆகியோர் நடுவராகச் செயல்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்ப்பேராயத்தின் உதவிப்பேராசிரியர் மு. பாலசுப்பிரமணி நன்றியுரை நவின்றார். பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன.
நிறைவாக போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரம் பின்வருமாறு.
1. முனைவர் ப. யாமினி – (எஸ்.ஆர்,எம் கணினி அறிவியல் பொறியியல் – ஆசிரியர்)
2. கா. டில்லிபாபு - (எஸ்.ஆர்,எம் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்-ஆசிரியர்)
3. எ. அம்மு ( எஸ்.ஆர்,எம். செவிலியர் கல்லூரி, மூன்றாம் ஆண்டு மாணவி)
4. ந. சூர்யகலா (எஸ்.ஆர்.எம். பல்மருத்துவக் கல்லூரி இரண்டாமாண்டு,மாணவி)
Share to All
0 comments:
Post a Comment